செப்டம்பர் -5,2023: நமது தாருஸ்ஸலாம் பள்ளியில் ஆசிரியர் தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
KFA அறக்கட்டளையின் நிர்வாகக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த விழாவில்,தாருஸ்ஸலாம் துவக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
விழாவில் பேச்சுப்போட்டி,கவிதைப்போட்டி,ஓவியப்போட்டி,கட்டுரைப் போட்டிகளி்ல் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
KFA அறக்கட்டளையின் தலைவர் சேமிரான் அப்துல் காதர் தலைமை ஏற்க, பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் S.M.முகம்மது அனீஸ் மற்றும் குண்டோட்டி கீழக்கட்சி ஜமாத் தலைவர் S.M.A.பசுலித்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தாருஸ்ஸலாம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரும்,KFA அறக்கட்டளையின் துணைத்தலைவருமான K.K.சிக்கந்தர், உதவித் தலைமை ஆசிரியர் M.S.ஜபருல்லா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியை KFA அறக்கட்டளையின் துணைச் செயலாளரும் தாருஸ்ஸலாம் மேல்நிலைப்பள்ளியின் மேல்நிலை வகுப்புகளுக்கான பொருப்பாளருமான M.A.ஹுசைன் அவர்கள் தொகுத்து வழங்க,KFA அறக்கட்டளகயின் செயலாளர் முகம்மது அவர்கள் நன்றியுரையுடன் ஆசிரியர் தின விழா இனிதே நிறைவு பெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து ஆசிரியர்,ஆசிரியர்களுக்கும் இறுதியில் இனிப்புகளை அறக்கட்டளை நிர்வாகிகள் வழங்கி வாழ்த்தினர்.