இன்று (ஆகஸ்ட் 15) நமது தாருஸ்ஸலாம் பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியேற்றி மாணவ,மாணவியரின் கலை ,இலக்கிய உரைகளுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சுதந்திர தினத்தை மையப்பொருளாக கொண்ட பல்வேறு தலைப்புகளில் மாணவ,மாணவியர் கவிதை,பேச்சு,கட்டுரை,ஒவியம் மற்றும் வினடி வினா போட்டிகளில் பங்கேற்று சிறப்பான தனித்திறனை வெளிப்படுத்தினர்.
விளையாட்டு,யோகா மற்றும் மனித பிரமிடு உள்ளிட்ட கலைத்திறன் போட்டிகளிலும் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு சிறப்பான பங்களிப்பை வழங்கினர்.
சுதந்திர தின விழாவின் தொடக்கமாக நம் பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் தலைமையாசிரியர் திரு.அக்பர் அலி ஆசிரியர் அவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
பல்வேறு கலை,இலக்கிய போட்டிகளில் கலந்து கொண்ட மாணவச் ணெல்வங்ளுக்கும், கடந்து ஆண்டு பொதுத் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
அனைத்து ஆசிரியப் பெருமக்களும்,முன்னாள் ஆசிரியர்களும்,மாணவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.