தாருஸ்ஸலாம் பள்ளியின் முன்னாள் மாணவர்களுக்கான ஒன்று கூடல் நிகழ்ச்சி நேற்று (22/04/2022 - சனிக்கிழமை) நடைபெற்றது.
நூற்றாண்டு கடந்த தாருஸ்ஸலாம் பள்ளியின் முன்னாள் மாணவர்களை ஒன்றிணைத்து ,ஒருங்கிணைக்கும் வகையில் முன்னாள் மாணவர்களுக்கான ஒன்று கூடலை ஏப்ரல் 22 ஆம் தேதி நோன்புப் பெருநாளில் நடத்த திட்டமிடப்பட்டது.
அதன் அடிப்படையில் ஒரு மாதம் முன்பே முன்னாள் மாணவர்களுக்கு சமூக வலைதளங்கள் மூலமாகவும்,நேரடியாகவும் அழைப்பு விடுக்கப்பட்டது.
முன்னாள் மாணவர்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து நிகழ்ச்சி நடைபெறும் தினத்தில் துறாப் தைக்கா வளாகத்திற்கு வருகை புரிந்தனர்.
படித்து முடித்த ஆண்டுவாரியாக தனித்தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டு முன்னாள் மாணவர்கள் அமர வைக்கம்பட்டனர்.
1921 ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் 500 க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு தங்களது பள்ளிக்கால நினைவுகளோடு நண்பர்களிடம் அளவளாவி மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் முத்தாய்ப்பாக நூறாண்டுகால பள்ளியின் வரலாறை தொகுத்து முன்னாள் ஆசிரியர்கள் பேட்டி அளிக்கும் வீடியோ பெரிய எல்.இ.டி திரையில் ஒளிபரப்பப்பட்டது.
பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் அற்புத தருணமாக இந்நிகழ்வு உண்ர்சி்ப்பூர்வமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.