நமது தேசத்தின் 74 வது சுதந்திர தினம் நாடு முழுவதும் ஆகஸ்டு -15 அன்று கொண்டாடப்பட்டது.
நமது பள்ளியின் சார்பில் சுதந்திர தின விழா பள்ளியின் தைக்கா வளாகத்தில் கொடியேற்றத்துடன் கொண்டாடப்பட்டது.
கொரோனோ நோந்த்தொற்று காரணமாக பள்ளிகளுக்கு காலவரையறையற்ற விடுமுறை அமலில் உள்ளதை தொடர்ந்து மாணவர்கள் கலந்துகொள்ள அழைக்கப்படவில்லை.
பள்ளியின் தொடக்கப்பள்ளி,மேல்நிலைப்பள்ளி ஆண்,பெண் ஆசிரியர்கள் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பொறுப்பாசிரியர்கள் அனைவரும் அரசு வழிகாட்டுதலின் படி சமூக இடைவெளியை கடைப்பிடுத்து அணுவகுத்து நின்று தேசியக்கொடியேற்றி மரியாதை செய்தனர்.
கொரோனோ தொற்றுநோய் தடுப்பு பணியில் அரும்பணியாற்றி வருகிற துப்புறவு தொழிலாளர்களை கௌரவிக்கும் பொருட்டு, விழாவின் சிறப்பு விருந்தினர்களாக நகராட்சி துப்புறவு பணியாளர்கள் அழைக்கப்பட்டு தேசியக் கொடியேற்ற, ஆசிரியப் பெருமக்களின் சமூக இடைவெளி அணிவகுப்போடு விழா சிறப்பாக நடந்து முடிந்தது.
தேசிய கொடியேற்றத்துக்கு பிறகு நாட்டுப்பண் இசைக்க ,இறுதியாக அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டு விழா நிறைவுற்றது.