நமது பள்ளியில் மார்ச் -2020ல் பதினோராம் வகுப்பு (+1) அரசு பொதுத்தேர்வு தேர்வு எழுதிய மாணவர்கள்,மாணவியர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சி விழுக்காட்டுடன் சாதனை படைத்துள்ளனர்.
சிறப்பிடம் பெற்ற மாணவர்கள்:
S.J.அப்துல் ஹலீம் 533/600 மதிப்பெண்களுடன் முதல் இடத்தையும், S.M.மர்வான் 516/600, மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும்,
N.T சுஹைல் 492/600 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தையும் பெற்று சாதித்துள்ளனர்.
தொடர் வெற்றி:
ஏற்கனவே வெளியாகியுள்ள 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்விலும் 100% வெற்றி பெற்றிருந்தனர்.
இதனை தொடர்ந்து தற்போது +1 தேர்விலும் 100% வெற்றியை எட்டி பள்ளியின் கல்விப் பயணத்தில் தொடர் வெற்றியை பதிவு செய்துள்ளது நமது பள்ளி.
பாராட்டுக்களும் ,வாழ்த்துகளும்:
பள்ளியில் +1 தேர்வில் சிறப்பிடம் பிடித்த மூன்று மாணவர்களுக்கும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் தலைமையாசிரியர் முன்னிலையில் கௌரவித்து பாராட்டுக்களையும்,வாழ்த்துக்களையும் கூறி மென்மேலும் வெற்றி பெற ஊக்கமளிக்கப்பட்டது.
மைல் கல்:
அடுத்த ஆண்டு நூற்றாண்டு விழாவை கொண்டாடவிருக்கும் நிலையில் தற்போது +1,+2 (10 ஆம் வகுப்பில் ஏற்கனவே அரசு அறிவிப்பு படி 100% தேர்ச்சி) ஆகிய அனைத்து வகுப்புகளிலும் 100% தேர்ச்சியை தக்கவைத்துக் கொண்டது பள்ளியின் வெற்றிப் பயணத்தில் ஒரு மைல் கல் என்று முன்னாள் மாணவர்கள்,பெற்றோர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.