கடந்த மார்ச் -2020 ஆண்டு நடைபெற்ற +2 அரசு பொதுத் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் 16/07/2020 - வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
இதில் தாருஸ்ஸலாம் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அனைவரும் 100% சதவீத தேர்ச்சியுடன் வெற்றி பெற்றுள்ளனர்.
பள்ளியின் முதல் மாணவராக 539/600 மதிப்பெண்களுடன் S.S.ஜெஸிமா அவர்களும்,
536/600 மதிப்பெண்களுடன் M.அப்துல் கஃப்ஃபார் அவர்களும்,
527/600 மதிப்பெண்களுடன் S.S.முகம்மது அஜ்மல் அவர்களும் தேர்ச்சி பெற்று சிறப்பிடம் பெறுகின்றனர்.
தாருஸ்ஸலாம் பள்ளி 10,11,12 ஆம் வகுப்புகளில் கடந்த வருடங்களை தொடர்ந்து இந்த ஆண்டும் கடையநல்லூர் நகரில் மிகச்சிறந்த தேர்வு முடிவுகள் மூலம் தொடர் வெற்றிகளை பெற்று சாதனை புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
புதிய பாடத்திட்டம், யூகிக்க முடியாத வினாத்தாள் கட்டமைப்பு என அனைத்து சவால்களையும் தாண்டி மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்றதை பெற்றோர்கள் , பள்ளியின் பழைய மாணவர்கள் என பல தரப்பினரின் பாராட்டுக்களையும்,வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.