தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தாருஸ்ஸலாம் மேல்நிலைப் பள்ளி சார்பில் கடையநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள ஏழை எளிய குடும்பங்களைக் கண்டறிந்து அவர்களுக்கு ரூபாய் 300 மதிப்புள்ள காய்கறிகள், பலசரக்கு பொருட்கள் அடங்கிய 50 பேக்கேஜ்களை வருவாய்த்துறை மூலம் வழங்குவதற்கு கடையநல்லூர் தாருஸ்ஸலாம் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சிக்கந்தர் அவர்கள் கடையநல்லூர் தாசில்தார் அழகப்ப ராஜாவிடம் வழங்கினார். அப்பொழுது கடையநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் தமிழ்ச்செல்வி, நகராட்சி சுகாதார ஆய்வாளர் சேகர, தாருஸ்ஸலாம் மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர் உசேன், ஆசிரியர் மீரான், துவக்கப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் அப்துல் பாரி ஆகியோர் உடன் இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை தாருஸ்ஸலாம் மேல்நிலைப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ஜபருல்லாஹ் அவர்கள் செய்திருந்தார் . கடையநல்லூர் தாசில்தார் அழகப்ப ராஜா இந்த நிவாரணப் பொருட்களை கருப்பாநதி அணை அருகே கலை மான் நகரில் குடியிருக்கும் பணிகர் இனத்தைச் சார்ந்த மக்களுக்கு நேரில் சென்று வழங்கினார்.மேலும் கடையநல்லூர் வட்டம் சாம்பவர் வடகரை கிராமம் அனுமன்நதி ஆற்று பகுதியில் தற்காலிக குடிசை செட் அமைத்து வசித்து வரும் குறவர் இன மக்கள் வசிக்கும் குடியிருப்பு உள்ளது. இந்த மக்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான மளிகை சாமான்கள்/ காய்கறிகள் அடங்கிய தொகுப்பு 20 பைகள் வழங்கப்பட்டது. மேலும் தாலுகா பகுதியில் உள்ள கிராமங்களில் கஷ்டப்பட்ட குடும்பங்களை கண்டறிந்து அந்தந்த கிராம நிர்வாக அலுவலர் மூலம் வழங்க அறிவுறுத்தினார்.