பேரிடர் மற்றும் வெடி விபத்துகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
இன்று - 23/12/2019 பேரிடர் மற்றும் வெடி விபத்துகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கடையநல்லூர் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் முன்னிலையில் நமது தாருஸ்ஸலாம் மேல்நிலைப்பள்ளியில் தைக்கா வளாகத்தில் வைத்து நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வெடி விபத்துகள் , பேரிடர் கால முதலுதவிகள் குறித்த விழிப்புணர்வு ஆலோசனைகளும்,செயல்முறை விளக்கங்களும் நமது கடையநல்லூர் காவல் நிலைய அதிகாரிகளால் வழங்கப்பட்டது.
தொடர்ச்சியாக போதை பொருட்களால் வரும் தீங்குகள்,உடல்நலக்குறைவு மற்றும் பின் விளைவுகள் குறித்தும் விரிவாக விளகப்பபட்டது.
நமது பள்ளி ஆசிரியப் பெருந்தகைகள் மற்றும் காவல் அதிகாரிகளின் விழிப்புணர்வை தொடர்ந்து நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக போதைப்பொருட்களை எந்த வடிவத்திலும் பயன்படுத்த மாட்டோம் என்று மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.